உள்ளடக்கத்துக்குச் செல்

குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன்
இயக்கம்அங் லீ
தயாரிப்புலி-ஹொங் சு
வில்லியம் ஹொங்
அங் லீ
கதைவாங் டு லு (நூல்)
க்வி லிங் வாங்
ஜேமெஸ் சுமஸ்
குவோ சங் சாய்
இசைடன் டான்
நடிப்புசோ-யன்-பாட்
மிசெல் இயோ
சாங் சீயீ
சங் சென்
செங் பெய் பெய்
வெளியீடுஆவணி 6 2000 (ஹொங்-ஹாங்)
ஓட்டம்120 நிமிடங்கள்.
மொழிமாண்டரின்
ஆக்கச்செலவு$15,000,000 அமெரிக்க டாலர்கள்

குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன் (Crouching Tiger, Hidden Dragon) இத்திரைப்படம் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த சீனத் திரைப்படமாகும்.

வகை

[தொகு]

தற்காப்புக்கலைப்படம் / நாடகப்படம்

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

குயிங் அரச வம்சங்களில் நடைபெற்றிருப்பது போல நகரும் கற்பனைத்திரைக்கதையே இத்திரைப்படமாகும்.லி மு பாய் மற்றும் யு ஷு லியென் இருவரும் தற்காப்புக்கலைகளில் தேற்சிபெற்றவர்கள்.இருவரிடத்தும் காதல் மலர்கின்றது ஆனாலும் இருவரும் தங்கள் தற்காப்புப் பள்ளிகளின் குறிக்கோளுக்கிணைய தங்கள் காதலை பரிமாராமல் இருந்தனர்.அதெ சமயம் பிரபல வாள் ஒன்றைக் களவு செய்யும் ஜென் அதனைத் தன் வசம் கொண்டு சேர்க்கின்றாள். வாளைத் திருடிய திருட்டுக் கும்பல்களைத் தேடுகின்றனர் லி மு பாய் மற்றும் யு ஷீ லியென்.ஜென்னைப் பல முறைகளில் சந்தித்துக் கொள்ளும் லி மு பாய் அவளைக் கொல்ல பல அரிய வாய்ப்புகள் வரும் பொழுதும் கொல்ல மறுக்கின்றார்.பின்னர் நடைபெறும் பல சம்பவங்களில் பாய் காயப்படவே அவரை கண்கானித்துக் கொள்கின்றார் யு ஷு லியென்.இதற்கிடையில் வாளைத் திருடியவளான யென் ஒரு கொள்ளைக்காரனைக் காதல் கொள்கின்றாள்.அவனையே மணம் செய்து கொள்ளவும் விரும்புகின்றாள்.ஆனால் பல காரணங்களினால் அவனை அடையாது இருக்கும் யென் அவனை அடந்தாளா என்பதே திரைக்கதை.

விருதுகள்

[தொகு]

வென்ற விருதுகள்

[தொகு]

பரிந்துரைக்கப்பட்ட விருதுகள்

[தொகு]
  • ஆஸ்கார் விருது:
    • சிறந்த திரைப்படம்
    • சிறந்த இயக்குனர் (அங் லீ)
    • சிறந்த திரைக்கதை -(ஜேமெஸ் சுமஸ்,க்வி லிங் வாங்,குவோ சங் சாய்)
    • சிறந்த உடை அலங்காரம்(டிம்மி யிப்)
    • சிறந்த பதிப்பாளர் (டிம் ஸ்குயெர்ஸ்)
    • சிறந்த பாடல் (ஜோர்ஜ் கலான்ரெல்லி, டன் டான் [இசையமைப்பு] மற்றும் ஜேமெஸ் சுமஸ் [பாடலாசொரியர்]) - பாடல் "எ.லவ் விபோர் டைம்"
  • சாட்டேர்ன் விருது சிறந்த நடிகர் (யன் பாட் சோ), சிறந்த நடிகை (மிஷெல் யாவோ),சிறந்த துணை நடிகை (ஷியி சாங்), சிறந்த இயக்குனர் (அங் லீ),சிறந்த எழுத்து -(ஜேமெஸ் சுமஸ்,க்வி லிங் வாங்,குவோ சங் சாய்), சிறந்த இசை(டன் டான் மற்றும் யோ யோ மா), சிறந்த உடையலங்காரம் (டிம்மி யிப்)
  • அமாண்டா விருது (நோர்வே): சிறந்த வேற்றூ மொழித் திரைப்படம்
  • அமெரிக்க திரைப்பட பதிப்பாளர்கள் ("எடி விருது"):சிறந்த பதிப்பாளர் (டிம் ஸ்குயெர்ஸ்)
  • அமெரிக்க ஒளிப்பதிவாளர்களின் குழுமம்: சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது
  • கலை இயக்குனர்களின் Guild: சிறந்த அலங்காரம்
  • வாப்டா விருது:
    • சிறந்த திரைப்படம்
    • சிறந்த நடிகை (மிஷெல் யாவோ)
    • சிறந்த துணை நடிகை(ஷியி சாங்)
    • சிறந்த திரைக்கதை -(ஜேமெஸ் சுமஸ்,க்வி லிங் வாங்,குவோ சங் சாய்)
    • சிறந்த ஒளிப்பதிவு (பீட்டர் பௌ)
    • சிறந்த பதிப்பாளர் (டிம் ஸ்குயெர்ஸ்)
    • சிறந்த ஒலிப்பதிவு (ட்ரூவ் கேர்னின், ரெயில்லி ஸ்டீல், and ராபேர்ட் பெர்னாண்டஸ்)
    • சிறந்த அல்ங்காரம் (டிம்மி யிப்)
    • சிறந்த முக/முடி அலங்காரம்(யன் லிங் மேன் மற்றும் சியூ மூ சௌ)
    • சிறந்த தந்திரக்காட்சிகள் (ரோப் ஹோட்க்சன், லீயோ லோ, ஜோனாதன் எப். ஸ்டேர்லண்ட், பெச்சி சியூக் மற்றும் ட்ராவிஸ் பௌமேன்)
  • Blockbuster பொழுதுபோக்கு விருது: சிறந்த சண்டை வல்லுனர்கள் [தளங்களிம் மட்டுமே] (சோ யன் பாட் மற்றும் மிஷெல் யாவோ)
  • பிரித்தானிய ஒளிப்பதிவாளர் கழகம்: சிறந்த ஒளிப்பதிவு விருது(பீட்டர் பௌ)
  • Broadcast Film Critics Association: சிறந்த திரைப்படம்